இன்று நடிகர் சங்கத் தேர்தல்...

பரபரப்பான சூழ்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது.
இன்று நடிகர் சங்கத் தேர்தல்...
x
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் நடிகர் சங்கத்தேர்தலுக்கு மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு சங்கத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடிகர் சங்க தேர்தல் -  தபால் வாக்குகள் பெறும் பணி நிறைவு...



நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்குகள், சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள அலுவலகத்தில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் மாலை ஐந்தரை மணியுடன், தபால் வாக்குகள் செலுத்தும் நேரம் முடிவடைந்தது. 
ஜூன் 16 ஆம் தேதி முதல் வெளி மாவட்டங்களில் இருக்கும் நடிகர்களுக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டது. வாக்குகள் பதியப்பட்டு, அனுப்பப்பட்ட உடன், தபால் வாக்கு பதிவு செய்யும் நேரம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.  இதற்குப் பின்னர் வந்து சேரும் தபால் வாக்கு ஏற்றுக் கொள்ளப்படாது என தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்