நடிகர் சங்க தேர்தல் - களத்தில் 68 வேட்பாளர்கள்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மொத்தம் 68 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
நடிகர் சங்க தேர்தல் - களத்தில் 68 வேட்பாளர்கள்
x
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மொத்தம் 68 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. பாண்டவர் மற்றும் சுவாமி சங்கரதாஸ் என இரு அணிகள் போட்டியிடும் நிலையில், பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகனும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர். இவர்களை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் போட்டியிடும் கார்த்தியை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பிரசாந்த் போட்டியிடுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்