சரத்குமார் மீதான புகார் குறித்து விஷாலுக்கு நடிகை ராதிகா கேள்வி

நடிகர் சரத்குமார் மீது கூறிய குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்து இருக்கிறீர்களா என நடிகர் விஷாலுக்கு, நடிகை ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.
சரத்குமார் மீதான புகார் குறித்து விஷாலுக்கு நடிகை ராதிகா கேள்வி
x
நடிகர் சரத்குமார் மீது  கூறிய குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்து இருக்கிறீர்களா என நடிகர் விஷாலுக்கு, நடிகை ராதிகா  கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் அழுக்கு மூட்டைகளை முதுகில் சமந்து கொண்டுள்ள விஷால், சரத்குமார் பற்றி பேசலாமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தொடர்ந்து பிரிவினை பேசி செயல்பட்டு வருவது, நடிகர் சங்கத்தை ஒற்றுமைபடுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ ஒரு போதும் உதவாது என தெரிவித்துள்ள ராதிகா,  இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயல வேண்டும் என விஷாலை கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்