திரைக்கு பின்னால் விஷால் உண்மையான நடிகர் : வரலட்சுமி

சரத்குமாரை குற்றம்சாட்டி நடிகர் விஷால் வெளியிட்ட பிரசார வீடியோவை வரலட்சுமி சரத்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
திரைக்கு பின்னால் விஷால் உண்மையான நடிகர் : வரலட்சுமி
x
சரத்குமாரை குற்றம்சாட்டி நடிகர் விஷால் வெளியிட்ட பிரசார வீடியோவை வரலட்சுமி சரத்குமார் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நடிகர் சங்கத்தில் தனது தந்தை சரத்குமார் உறுப்பினராக இல்லாத நிலையிலும், அவரை தவறாக குற்றம் சாட்டுவதா என கேள்வி எழுப்பியுள்ளார். எனது தந்தையை இழிவுப்படுத்துவதற்கு பதில், உங்கள் அணி செய்த நல்லதை சொல்லி வாக்கு சேகரிக்கலாம் என வரலட்சுமி அறிவுறுத்தியுள்ளார். விஷாலின் பொய்யான இரட்டை நிலைப்பாடு  தெரிந்ததால் தான், பாண்டவர் அணியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், தனி அணி அமைத்திருப்பதாகவும் திரைக்கு பின்னால் விஷாலின் உண்மையான நடிப்பு வெளிப்பட்டிருப்பதாகவும் வரலட்சுமி சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்