டைமிங் காமெடி வசனங்களில் கைதேர்ந்தவர் நாடக நடிகர் கிரேஸி மோகன்...

கிரேஸி மோகனின் வாழ்க்கை வரலாறு குறித்து, பதிவு செய்கிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு
டைமிங் காமெடி வசனங்களில் கைதேர்ந்தவர் நாடக நடிகர் கிரேஸி மோகன்...
x
1952 ஆம் ஆண்டு  அக்டோபர் 16ஆம் தேதி பிறந்த கிரேஸி மோகனின் இயற்பெயர் மோகன் ரங்கசாரி.  மெக்கானிக்கல் இன்ஞினியரிங் பட்டதாரியான இவர் கல்லூரி நாட்களிலேயே மேடை நாடங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். 1979ஆம் ஆண்டு தனது முதல் முழுநீள மேடை நாடகமான கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.

அதனஇதொடர்ந்து இவரின் கதையில் அரங்கேறிய "மேரேஜ் மேட் இன் சலூன்" கதையை திரைப்படமாக இயக்க இயக்குநர்  கே.பாலசந்தர் முடிவு செய்து, அந்த படத்துக்கு வசனம் எழுத கிரேஸி மோகனை ஒப்பந்தம் செய்தார். அதுதான் வெள்ளித்திரையில் 'பொய்க்கால் குதிரை'யாக வெளியானது.

பல்வேறு படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய கிரேஸி மோகன், முன்னணி நடிகர் கமல்ஹாசனுடன்  கூட்டணி சேர்ந்த ஆபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. சின்ன மாப்பிள்ளை, வியட்நாம் காலனி, சின்ன வாத்தியார், Mr.ரோமியோ, ஆஹா, அருணாச்சலம், ரட்சகன், பூவெல்லாம் கேட்டுப்பார், லிட்டில் ஜான், நான் ஈ உள்ளிட்ட திரைப் படங்களின் வசனகர்த்தா கிரேஸி மோகன் தான். 

தன் எழுத்தில் இரட்டை அர்த்தமோ, பிறரை கேலி செய்யும் வகையிலோ, எவரையும் புண்படுத்தாதவாறு அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் சிரிப்பு என்ற வார்த்தைக்கு உயிரூட்டி இருந்தவர்,  கிரேஸி மோகன். மாரடைப்பால் மரணம் அடைந்த கிரேஸி மோகனின் உடல், சென்னை - மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கிரேஸி மோகனின் இறுதி சடங்கு நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு  பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்