பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்
காதலன், ரட்சகன், காதல் மன்னன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் காலமானார்.
அவருக்கு வயது 81. வயது மூப்பு காரணமாக, பெங்களூருவில் உள்ள இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச புகழ்பெற்ற நாடக ஆசிரியர், கவிஞர், விமர்சகர், மொழிப்பெயர்ப்பாளர், இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என படைப்புக்களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். காதலன், செல்லமே, ரட்சகன், காதல்மன்னன் உள்பட பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் முன்னணி பாலிவுட் படங்களிலும் கிரீஷ் கர்னாட் நடித்துள்ளார். நடிப்பு, இயக்கம், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்ட கிரிஷ் கர்னாடுக்கு, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், தேசிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.
Next Story