பாண்டவர் அணி சார்பில் வேட்புமனு தாக்கல்...

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் துவங்கியது.
x
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் துவங்கியது. நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடும் நிலையில் அந்த அணி சார்பில், பொதுச் செயலாளர் விஷால், துணைத்தலைவர் பூச்சி முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. நடிகைகள் குஷ்பூ, கோவை சரளா மற்றும் நடிகர் மனோபாலா ரமணா, நந்தா, தளபதி தினேஷ், நடிகர் விக்னேஷ், நடிகை லதா உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களுகான வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்