பி.எம். நரேந்திரமோடி படம் வசூலில் சாதனை...

திரைக்கு வந்து சில நாட்களே ஆன PM NARENDRA MODI என்ற வாழ்க்கை வரலாற்று இந்தி படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
பி.எம். நரேந்திரமோடி படம் வசூலில் சாதனை...
x
திரைக்கு வந்து சில நாட்களே ஆன PM NARENDRA MODI என்ற  வாழ்க்கை வரலாற்று இந்தி படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது. பாலிவுட் இயக்குநர் OMUNG KUMAR இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நரேந்திரமோடியாக VIVEK OBEROI நடித்துள்ளார். அமித்ஷா வேடத்தில் MANOJ JOSHI தோன்ற, வாஜ்பாய் வேடத்தில் AANJJAN SRIVASTAV அசத்தியிருக்கிறார். 

இந்த படத்தில், நரேந்திரமோடியின் தாயார் ஹீரா பென் மோடி வேடத்தில் ZARINA WAHAH நடித்து, முத்திரை பதித்துள்ளார். ரெயில் நிலைய டீ விற்பனை செய்யும் சிறுவனாக வாழ்க்கையை துவக்கி, படிப்படியாக உயர்ந்து நாட்டின் மிக உயரிய பிரதமர் பதவி வரை எட்டிப்பிடித்த நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாறு, இந்த படத்தில் தத்ரூபமாகவும் மிகவும் அழகாகவும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்