பல தடைகளுக்கு பிறகு வெளிவந்தது, பி.எம் மோடி

பல தடைகளுக்கு பிறகு மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பி.எம் மோடி இன்று வெளியாகியுள்ளது.
பல தடைகளுக்கு பிறகு வெளிவந்தது, பி.எம் மோடி
x
பல தடைகளுக்கு பிறகு மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பி.எம் மோடி இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் 
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் முடியும் வரை திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, தற்போது தமிழக திரையரங்குகள் உட்பட இந்தியா முழுவதும் இந்த படம் 
ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.  ஓமங் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில், நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்