தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் : மே 1ஆம் தேதி எழும்பூரில் நடைபெற உள்ளது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 3ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் : மே 1ஆம் தேதி எழும்பூரில் நடைபெற உள்ளது
x
இந்த பொதுக்குழுவில் சங்க அறக்கட்டளையில் இருந்து எடுத்ததாக கூறப்படும் 7.5 கோடி ரூபாய் பணம் பற்றிய விபரம் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்திய வரவு செலவு கணக்கு இவற்றை தாக்கல் செய்வதோடு தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று அதன் தலைவர் விஷால் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாவின் ஆலோசனைப்படி, மறுதேதி குறிப்பிடப்படாமல் பொதுக்குழு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் மே 1ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்