களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை
பதிவு : ஏப்ரல் 23, 2019, 12:56 AM
விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது
விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படத்தை தமிழகம் மற்றும் புதுவையில் வெளியிடுவதற்கான  உரிமையை பெற்ற ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ், அதனை மெரினா பிக்சர்ஸுக்கு வழங்க மூன்று கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது.இந்நிலையில் ஒப்பந்தத்தை மீறி படத்தின் உரிமையை கியூப் நிறுவனத்திற்கு மெரினா பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கியதாக கூறப்படுகிறது.இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால், களவாணி 2 படத்தை  வெளியிட தடை விதிக்க கோரி ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜூன் பத்தாம் தேதி வரை களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7921 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1697 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4884 views

பிற செய்திகள்

சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.

82 views

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

290 views

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

114 views

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

91 views

சுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம் - எஸ்.ஏ.சந்திரசேகர்

சுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருப்பதாகவும் பலருக்கும் நடந்திருக்கும் இது தற்போது நடிகர் சூர்யாவிற்கு நடந்துள்ளதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

37 views

நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் : ரசிகர்கள், உறவினர்கள் அஞ்சலி

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்தில், அவரது உருவ சிலைக்கு நடிகர் பிரபு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.