ரஜினியின் "தர்பார் " ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமது 167 வது படத்தில் நடிகர் ரஜினி நடிக்கிறார்.
x
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமது 167 வது படத்தில் நடிகர் ரஜினி நடிக்கிறார். 'தர்பார்' என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி சிரித்தபடி இருக்கும் முதல் போஸ்டரில், சரி எது, தவறு எது என நீயே தீர்மானிக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியா கேட், துப்பாக்கி, போலீஸ் தொப்பி, வேட்டை நாய் ஆகியவற்றுடன், முதல் போஸ்டர் களைகட்டியுள்ளது. ஏற்கனவே 3 இடங்களில் ரஜினியுடன் நடித்துள்ள நயன்தாரா, 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் இசை அனிருத், பேட்டை பராக் பாடலாசிரியர் விவேக், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு என பலமான கூட்டணி அமைத்திருப்பதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்கி, தொடர்ந்து நடைபெற உள்ளது. ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக, ரஜினியின்  தர்பார் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்