சுயசரிதை எழுதுகிறார் இளையராஜா

சுயசரிதை எழுதப் போவதாக, இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சுயசரிதை எழுதுகிறார் இளையராஜா
x
சுயசரிதை எழுதப் போவதாக, இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். அவரது 75-வது பிறந்தநாள் விழாவை, தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு அதில் இளையராஜாவும் பங்கேற்று பேசி வருகிறார். இந்நிலையில், தமது சுயசரிதையை எழுத உள்ளதாக, அவர் அறிவித்துள்ளார். 'அன்னக்கிளி' திரைப்படத்துக்கு 1976-ல் இசையமைத்து, முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இளையராஜா, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்