சினிமா பைனான்சியர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்
பதிவு : மார்ச் 22, 2019, 06:13 PM
சினிமா பைனான்சியர் சுப்பிரமணியம் அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.
சினிமாத்துறையில் பலர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது ரெட்டி டைரி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு 11மணி அளவில் இப்படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி 2 அடியாட்களுடன்   தன் வீட்டிற்கு வந்து சிசிடிவி மின் இணைப்பை துண்டித்து, தன்னையும், தன்னுடைய உதவியாளரையும் தாக்கியதாக  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய மேலாளர் தலையில் பாட்டிலால் தாக்கிய அவர்கள், தன்னுடைய ஆடையையும் கிழித்து தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தொலைபேசி வழியாக புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், பைனான்சியர்  சுப்பிரமணியம், தமிழகம் மற்றும் ஹைதராபத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே பைனான்சியர் சுப்பிரமணியத்தால் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி தெலுங்கானா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், தன்னுடைய  காரை சுப்பிரமணியம் அபகரிக்க முயல்வதாக குற்றம் சாட்டி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

1004 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

3370 views

பிற செய்திகள்

அத்தி வரதரை தரிசனம் செய்தார் லதா ரஜினிகாந்த்...

அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

276 views

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

31 views

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

437 views

சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.

95 views

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

320 views

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

123 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.