கார்த்தி படத்தில் நடிக்கிறார் ஜோதிகா

கமல்ஹாசன் நடித்த "பாபநாசம்" மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரள இயக்குநர் ஜித்து ஜோசப்.
கார்த்தி படத்தில் நடிக்கிறார் ஜோதிகா
x
கமல்ஹாசன் நடித்த "பாபநாசம்" மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரள இயக்குநர் ஜித்து ஜோசப். அவர் அடுத்ததாக, கார்த்தியுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது படத்தின் கதையை ஜித்து ஜோசப் எழுதி முடித்துவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் கார்த்தியின் அண்ணியும், நடிகையுமான ஜோதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்