ஏப்ரல் 19ல் வெளியாகிறது விஷாலின் 'அயோக்யா'

நடிகர் விஷால் நடித்து வரும் 'அயோக்யா' திரைப்படம், ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 19ல் வெளியாகிறது விஷாலின் அயோக்யா
x
நடிகர் விஷால் நடித்து வரும் 'அயோக்யா' திரைப்படம், ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 'சண்டக்கோழி 2' படத்துக்குப் பிறகு விஷால் நடித்து வரும் படம் 'அயோக்யா'. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் 19-ம் தேதி 'அயோக்யா' வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்