மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் நடிகை லைலா

திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை லைலா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார்.
மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் நடிகை லைலா
x
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை லைலா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார். நடிகர் அஜித்துக்கு ஜோடியாக 2006ல், பரமசிவம் என்ற படத்தில் நடித்திருந்தார் லைலா. அவருக்கு திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து  புதிய பட வாய்ப்புக்களை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆலிஸ் என்ற த்ரில் படத்தை, இயக்குநர் மணி சந்துரு இயக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் லைலா நடிக்கிறார். பியார் பிரேம காதல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் ரைசா கதாநாயகியாக நடிக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்