அரசியல் படத்தில் ரஜினி - முருகதாஸ் கூட்டணி?

நடிகர் ரஜினிகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் 'நாற்காலி' என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
x
நடிகர் ரஜினிகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் 'நாற்காலி' என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதனால் இந்தப் படம் முழுக்க, முழுக்க அரசியல் கருத்துக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ரஜினி நடிக்கும் படத்திற்கு 'நாற்காலி' என்று பெயரிடப்படவில்லை என்றும், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இயக்குனர் முருகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கனவே விஜயை வைத்து முருகதாஸ் இயக்கிய படம் பல சர்ச்சைகளை சிக்கிய நிலையில், அடுத்த படத்தின் பெயர் நாற்காலி என தகவல் வெளியான உடனே அதனை முருகதாஸ் மறுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்