2018-ல் அதிக படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ்

2018ம் ஆண்டில் அதிக படங்களில் கதாநாயகியாக, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
2018-ல் அதிக படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ்
x
2018ம் ஆண்டில் அதிக படங்களில் கதாநாயகியாக, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவர் அறிமுகமான முதல் படம் 'இது என்ன மாயம்'. கீர்த்தி சுரேஷ் நடித்த முதல் படமே தோல்வியடைந்தது. இருந்தாலும், தளராமல் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். 2018 ம் ஆண்டில் கீர்த்தி சுரேஷ், ஏழு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 'அக்னியாதவாசி, தமிழில் 'தானா சேர்ந்த கூட்டம்', 'நடிகையர் திலகம்', 'சாமி ஸ்கொயர்', 'சண்டக்கோழி 2', 'சர்கார்', 'சீமராஜா', ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 'லட்சுமி', 'சாமி 2', 'வட சென்னை', 'செக்க சிவந்த வானம்', 'கனா' ஆகிய ஐந்து படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக நடிகை வரலட்சுமியும் ஐந்து படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகைகளாக இருந்து வரும் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா ஆகியோர் இந்த வருடம் குறைவான படங்களிலேயே நடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்