காதல் வலையில் விழுந்தாரா மடோனா....

'பிரேமம்' மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மடோனா செபாஸ்டின், தமிழில் விஜய் சேதுபதியுடன் 'காதலும் கடந்து போகும்' படத்தில் நடித்தார்.
காதல் வலையில் விழுந்தாரா மடோனா....
x
'பிரேமம்' மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மடோனா செபாஸ்டின், தமிழில் விஜய் சேதுபதியுடன் 'காதலும் கடந்து போகும்' படத்தில் நடித்தார். இந்த நிலையில், இசையமைப்பாளர் ராபி ஆபிரகாமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை மடோனா தனது சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டார். அந்த படத்தில், ''சிலருடன் இருக்கும்போது மட்டும்தான் நாம் நாமாக இருக்க முடியும். அதுதான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் எனது வாழ்க்கையில் இருப்பது அதிர்ஷ்டம்'' என்று பதிவிட்டுள்ளார். 

இதையடுத்து, இருவரும் காதலிப்பதாக பேசப்படும் நிலையில், இதுவரை மடோனா அதனை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்