ரசிகர்களை சந்தித்த "கனா" திரைப்படக் குழு
சேலத்தில் "கனா" திரைப்படம் ஓடும் திரையரங்குக்கு இயக்குனர் அருண் காமராஜ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் குழுவினர் வந்து ரசிகர்களை சந்தித்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் அருண் காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் உள்ளிட்டோர் நடித்த "கனா" திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சேலத்தில் "கனா" திரைப்படம் ஓடும் திரையரங்குக்கு இயக்குனர் அருண் காமராஜ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் குழுவினர் வந்து ரசிகர்களை சந்தித்தனர். அப்போது, பேட்டி அளித்த அருண் காமராஜ், இணையதளத்தில் திரைப்படங்களை பொதுமக்கள் பார்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது, திரைத்துறையில் சாதிக்க விரும்பும் பெண்கள் தங்களது திறமைகளை சரியாக பயன்படுத்தினால் வெற்றி பெறலாம் என்றார்.
Next Story