மெரினாவில் கர்சீப் விற்கும் ரங்கம்மாள் பாட்டி..

திரைப்படங்களில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாட்டி ஒருவர் வறுமை காரணமாக கடற்கரையில் கர்சீப் விற்றுக் கொண்டிருக்கிறார்.
x
காமெடி பிரியர்களுக்கு இந்தப் பாட்டியை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.. இவர் தான் ரங்கம்மாள்..தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தற்போது சென்னை வடபழனியில் வசித்து வருகிறார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நடித்து வரும் இவர் லதா போன்ற நடிகைகளுக்கு, சண்டைக் காட்சிகளின் போது டூப் போட்டுள்ளார். குறிப்பாக வடிவேலுவுடன் இவர் நடித்த காமெடி காட்சி ஒன்று இன்று வரை பிரபலம்..ரங்கம்மாளின் தற்போதைய நிலைமையை பார்ப்பவர்கள், அவரின் காமெடி காட்சிகளையும் மறந்து கண் கலங்குவார்கள்.. ஆம்.. தனது நகைச்சுவை நடிப்பால் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரங்கம்மாள் இப்போது சோகத்தில் இருக்கிறார். வாய்ப்புகள் இல்லாததால் மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று, பிழைப்பு நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

மெரினாவிற்கு வருபவர்களும் ரங்கம்மாள் பாட்டியை அடையாளம் கண்டு கொண்டு அவருடன் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். அனைவரின் செல்ஃபிக்கும் புன்னகையுடன் போஸ் கொடுக்கிறார்..83 வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என்று சொல்லும் ரங்கம்மாள், பிறரின் அனுதாபத்தை எதிர்ப்பார்ப்பதில்லை.. வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை.. அதனால் தான் கர்சீப் விற்கிறேன் என்று ரங்கம்மாள் சொல்லும் போது அவரின் புன்னைகையையும் தாண்டி, வலி தென்படுகிறது...நலிந்த நடிகர்களின் வாழ்வை மேம்படுத்துவதே லட்சியம் என தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம், ரங்கம்மாள் பாட்டிக்கும் உதவி செய்யும் என நம்புவோம்..

Next Story

மேலும் செய்திகள்