வாடகை பாக்கி விவகாரத்தில் தகராறு : ஓட்டல் ஊழியர்கள் மீது நடிகை அக் ஷதா ஸ்ரீதர் புகார்

வாடகை பாக்கி வைத்த விவகாரத்தில் தகராறு செய்து, ஆபாசமாக திட்டியதாக ஓட்டல் ஊழியர்கள் மீது பெங்களூரு மாநகர காவல் ஆணையரிடம் நடிகை அக் ஷதா ஸ்ரீதர் புகார் அளித்துள்ளார்.
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், உள்ள தனியார் விடுதியில், வாடகை பாக்கிக்காக நடிகை அக் ஷதா ஸ்ரீதர் ஓட்டலில் சிறை வைக்கப்பட்டார். வாடகை பாக்கி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, நடிகை விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகை அக் ஷதா ஸ்ரீதர் பெங்களூரு மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வாடகை பாக்கிக்காக தன்னிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளில் ஓட்டல் ஊழியர்கள் திட்டியதாக அந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். ஓட்டல் மேலாளர் ஸ்ரீதர், ஊழியர்கள் மற்றும் பிரச்சினையின் போது உதவ முன்வராத படக்குழுவினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை அக் ஷதா ஸ்ரீதர் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்