பாடல்களுக்கு காப்புரிமை கோரும் விவகாரம் : இளையராஜாவுக்கு எதிராக வழக்கு

பாடல்கள் காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக திரைப்பட தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பாடல்களுக்கு காப்புரிமை கோரும் விவகாரம் : இளையராஜாவுக்கு எதிராக வழக்கு
x
பாடல்கள் காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக திரைப்பட தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் பி.டி. செல்வகுமார், அன்புசெல்வன், ஜெபஜோன்ஸ், மீரா கதிரவன், மணிகண்டன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏதேனும் திரைப்படத்தை எடுக்க முயற்சிக்கும் போது இயக்குனரின் அறிவுரைப்படி நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுனர்கள் முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 80 ஆண்டுகளாக இந்த நடைமுறை தான் சினிமா துறையில் இருந்து வருகிறது, ஊதியம் பெற்று கொண்டு பணியாற்றும் இசைமைப்பாளர்கள் தங்கள் பணிக்கு எந்த உரிமையும் கோர முடியாது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அவர்களின் பங்களிப்புக்கு முதல் உரிமையாளர் தயாரிப்பாளர் தான் என்றும், இந்த உரிமையை இந்திய காப்புரிமைச் சட்டம் வழங்கியுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்