ஒரே சமயத்தில் திரைக்கு வரும் 7 படங்கள்...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சுமார் 7 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
ஒரே சமயத்தில் திரைக்கு வரும் 7 படங்கள்...
x
தனுஷின் மாரி-2, விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், அதர்வா நடித்துள்ள பூமராங், ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கனா ஆகிய படங்களை வெளியிட அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதேபோல, கன்னடத்தில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள KGF என்ற திரைப்படமும் கிறிஸ்துமஸை ஒட்டி வெளியிடப்படுகிறது. பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால், தியேட்டர் கிடைப்பதில் பிரச்சினை எழலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்