புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற சோனாலி - நலமோடு இருப்பதாக கணவர் தகவல்

புற்றுநோய்க்கு சிகிச்சை முடிந்து பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே மும்பை திரும்பினார்.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற சோனாலி - நலமோடு இருப்பதாக கணவர் தகவல்
x
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரே கடந்த ஜூலை மாதம் முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 5 மாத சிகிச்சைக்குப் பிறகு நேற்று அவர் மும்பை திரும்பினார். இதுதொடர்பாக அவரது கணவர் கோல்டி பிகில் கூறும்போது, சோனாலி நலமோடு இருப்பதாகவும் பழைய நிலைமைக்கு திரும்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மீண்டும் நோய் தாக்கினால் அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்