இளையராஜா பாடல்களுக்கு காப்புரிமை எவ்வளவு..?

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட, யார் யார் எவ்வளவு காப்புரிமை தொகை வழங்க வேண்டும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
இளையராஜா பாடல்களுக்கு காப்புரிமை எவ்வளவு..?
x
* சம்பளத்தின் அடிப்படையில் பாடகர்கள் அனைவரும் A,B,C என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிஹரன், சித்ரா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோர், ஏ பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற இரண்டு பிரிவுகளிலும் அவர்களை விட சிறிய பாடகர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

* அந்த வகையில், வெளிநாட்டு கச்சேரிகளில், இளையராஜா பாடல்களைப் பாடும் ஏ பிரிவு பாடகர்கள் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதேபோல, பி பிரிவினருக்கு 15 லட்ச ரூபாயும், சி பிரிவினருக்கு 10 லட்ச ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

* இந்திய மைதானங்களில் நடைபெறும் கச்சேரிகளில் பாட 75 ஆயிரம் ரூபாயும், தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பாடுபவர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும். இதேபோல ஹோட்டல்களில் பாட முப்பதாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

* காப்புரிமை தொகையை வசூல் செய்யும் அதிகாரம், தமிழ் இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கிடைக்கும் வருவாயில், 80 சதவீதம் இளையராஜாவிற்கும் , 20 சதவிதம் இசைக்கலைஞர்களுக்கும் வழங்கப்படும்.

Next Story

மேலும் செய்திகள்