2.0 பட வில்லனுக்கு எழுத்தாளர் பெயரா? - எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

'2 பாய்ன்ட் ஓ' திரைப்படத்தின் வில்லனுக்கு, எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பெயர் வைக்கப்பட்டுள்ளதா? என்ற சர்ச்சைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார்.
2.0 பட வில்லனுக்கு எழுத்தாளர் பெயரா? - எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்
x
'2 பாய்ன்ட் ஓ' திரைப்படத்தின் வில்லனுக்கு, எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பெயர் வைக்கப்பட்டுள்ளதா? என்ற சர்ச்சைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார். தமது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெயமோகன், 'பட்ஷி ராஜன்' என்பது எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பெயர் அல்ல என்றும், அவரது தந்தை நாங்குநேரி பட்சிராஜ அய்யங்கார்  பெயர் என்றும் விளக்கமளித்துள்ளார். இந்த திரைப்படத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்ததாகவும், அவருக்காகவே மரபு சார்ந்த பலவிஷயங்கள் சேர்க்கப்பட்டன என்றும் கூறியுள்ளார். மேலும், அந்தப் பெயர் 'வில்லனு'க்கு வைக்கப்படவில்லை, படத்தில் அவர் வில்லன் அல்ல என்றும் அவர் தான் படத்தின் உணர்ச்சிகரமான மையம் என்றும் ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்