ஜெர்மனியில் முகாமிட்டுள்ள அஜித்...

குட்டி விமான வடிவமைப்பு தொடர்பாக, நடிகர் அஜித், ஜெர்மனியில் முகாமிட்டுள்ளார்.
ஜெர்மனியில் முகாமிட்டுள்ள அஜித்...
x
குட்டி விமான வடிவமைப்பு தொடர்பாக, நடிகர் அஜித், ஜெர்மனியில் முகாமிட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எம்.ஐ.டி. வளாகத்தில், ஏரோநாட்டிகல் மாணவர்கள் 'ட்ரோன்' குறித்து ஆய்வுசெய்ய தக்சா என்ற குழுவை உருவாக்கினர். இந்த குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து வருகிறார். சமீபத்தில், இந்தக் குழு, ஆஸ்திரேலியாவில் நடந்த 'மெடிக்கல் எக்ஸ்பிரஸ் -2018 யு.ஏ.வி. சேலஞச்' போட்டியில் பங்கு பெற்று சர்வதேச அளவில் 2வது இடத்தைப் பிடித்தது. இந்நிலையில், தக்சா குழுவின் அடுத்த திட்டம் தொடர்பாக, நடிகர் அஜித் ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு வாரியோ ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் ஆலோசனை நடத்தினார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்