10 வருடங்களுக்கு பிறகு இணையும் விஜய் - நயன்தாரா ஜோடி
தெறி-மெர்சல் வெற்றி படங்களின் வெற்றி இணையர்கள் தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜய்யின் 63வது படத்தில் இணைகிறார்கள்.
தெறி-மெர்சல் வெற்றி படங்களின் வெற்றி இணையர்கள் தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜய்யின் 63வது படத்தில் இணைகிறார்கள். தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான 'ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்', இம்மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைக்கிறார்.,விவேக் அவர்கள் பாடல் வரிகளை எழுத இருக்கிறார். ஒளிப்பதிவு GK விஷ்ணு ,சண்டை பயிற்சி அனல் அரசு ,படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி Lரூபன் செய்ய இருகிறார். தற்போது தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகர் விஜயுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேருகிறார்.
நடிகை நயன்தாரா விஜய்யுடன் சிவகாசி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் .இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் 2009இல் வெளிவந்து வெற்றி பெற்ற வில்லு என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Next Story

