சமூக வலை தளங்கள் தேடிய 'தீப்-வீர்' திருமணம் : ரசிகர்களை கவர்ந்த திருமண உடை

பாலிவுட் மட்டுமின்றி, சர்வதேச ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'தீப்-வீர்' திருமணம் குறித்து, ஒட்டுமொத்த சமூக வலை தளங்களும் பேசிக் கொண்டிருக்கிறது
சமூக வலை தளங்கள் தேடிய தீப்-வீர் திருமணம் : ரசிகர்களை கவர்ந்த திருமண உடை
x
பாலிவுட் மட்டுமின்றி, சர்வதேச ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'தீப்-வீர்' திருமணம் குறித்து, ஒட்டுமொத்த சமூக வலை தளங்களும் பேசிக் கொண்டிருக்கிறது. இந்தி நடிகை தீபிகாவும், நடிகர் ரன்வீரும், பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இத்தாலி நாட்டிலுள்ள 'கோமோ' ஏரியில் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம், ஊடக வெளிச்சமின்றி நடந்து முடிந்தது. 

பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது மாடலிங் துறையில் சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக "ஐஸ்வர்யா" என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007-ல் "ஓம் ஷாந்தி ஓம்" இந்தி ப‌ட‌த்தினால், இந்தியா முழுவ‌தும் பேசப்பட்டார். இந்த ஜோடியின் நடிப்புக்கு மட்டுமல்ல, காதல் பரிவர்த்தனைகளை ரசிக்கவும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 
அந்த ரசிகர்களுக்காக, இந்த ஜோடி, திருமண புகைப்படங்களை தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். 

தென் மாநிலத்தைச் சேர்ந்த தீபிகாவின் திருமண நிகழ்ச்சி, முதல் நாள், 'கொங்கனி' முறைப்படி களை கட்டியது. ஜொலிக்கும் தங்க நிறத்துடன், மெரூன் நிற பட்டாடையை அவர் உடுத்தியிருந்தார். புடவைக்கு ஏற்றதுபோல பிற ஆபரணங்களுடன் தீபிகா தேவதையாக காட்சியளித்தார். அப்போது, வெள்ளை குர்தா மற்றும் வேட்டி அணிந்து, தென்னிந்திய மாப்பிள்ளை தோற்றத்தில் இருந்தார் ரன்வீர். கொங்கனி திருமணத்தன்று பரிமாறப்பட்ட உணவுகள் அனைத்தும் 'மங்களூர்' வகை உணவுகள். தென்னிந்திய முறைப்படி வாழை இலையில் பரிமாறப்பட்டதாம்.

இரண்டாவது நாள் திருமணத்தில் இருவரும் 'சிந்தி' பாரம்பர்ய முறைப்படி சிவப்பு நிற ஆடைகளை உடுத்தியிருந்தனர். சிவப்பு 'ப்ரோகேட்' ஷெர்வானி, தலைப்பாகை, எம்ப்ராய்டரி வேலைப்பாடு நிறைந்த துப்பட்டா, ஆடைகளுடன் 'பொல்கி' நெக்லேஸ் என வட மாநில மணமகன் உடையில் ரன்வீர் இருந்தார். 'பத்மாவத்' திரைப்படத்தில் பார்த்ததைவிட 'ரியல்' திருமண உடையில் தீபிகா, கொள்ளை கொண்டார். கனமான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த சிவப்பு நிற லெஹெங்கா சோலி, அதற்கு பொருத்தமான முத்துக்கள் பதித்த நெத்திச்சுடி உள்ளிட்ட ஆபரணங்களும் அசத்தலாக இருந்தன. 

தீபிகாவின் திருமண மோதிரத்தின் விலை 2 கோடி ரூபாய்க்கும் அதிகம். ஆனால், ரன்வீர் மிகவும் சாதாரணமாக, தங்க மோதிரத்தை அணிந்திருந்தார். சிந்தி திருமணத்தன்று வட இந்திய உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. திருமணத்தை முடித்து, இந்தியா திரும்பிய காதல் ஜோடியை ஒட்டு மொத்த கண்களும் மொய்த்துவிட்டன. நவம்பர் 21-ம் தேதி, பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. மும்பையில், நவம்பர் 28-ம் தேதி உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவும், டிசம்பர் 1-ம் தேதி, பாலிவுட் நண்பர்களுக்காகவும் தனித்தனியே வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்