மணிரத்னம் பட வாய்ப்பை பெற்ற புதிய இசையமைப்பாளர்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான '96' படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா-வுக்கு, இயக்குனர் மணிரத்னம் தமது அடுத்த படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.
மணிரத்னம் பட வாய்ப்பை பெற்ற புதிய இசையமைப்பாளர்
x
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் '96'. இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்திருந்தார். விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள 'சீதக்காதி' படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். தற்போது, இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கோவிந்த் வசந்தாவுக்கு கிடைத்துள்ளது. இந்தப் புதிய படத்தை தனசேகரன் இயக்கவுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்