'ராக்கெட்ரி' படம் மூலம் இயக்குனராக மாறிய நடிகர் மாதவன்

நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள ராகெட்ரி நம்பி விளைவு என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனராக மாறிய நடிகர் மாதவன்
x
நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள ராகெட்ரி நம்பி விளைவு என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அபாரமான திறமை கொண்ட நம்பி நாராயணன் மீது , பாகிஸ்தானுக்கு தகவல்களை விற்றதாக பொய் வழக்கு தொடுகப்பட்டு 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இவரது கதையை மாதவன் படமாக எழுதியது மட்டுமின்றி ஆனந்த் மகாதேவனுடன் சேர்ந்து இயக்கவும் செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய் மாதவன், நம்பி நாராயணனின் கதையை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போவார்கள் என்று கூறினார். அதே விழாவில் பேசிய நம்பி நாராயணன், தனக்கு நேர்ந்தது போன்ற தவறு வேறு யாருக்கும் நிகழ கூடாது என்பதற்காக இந்த படம் வெளியாவது முக்கியம் என்று தெரிவித்தார். மேலும், கல்லூரி காலத்தின் போது நம்பி நாராயணன் எப்படி அழகான இளைஞராக இருந்தார் என்று புகைப்படத்தை காட்டி கலகலப்பாக பேசிய மாதவன் இந்த படத்தை எடுத்ததில் பெருமையடைவதாக கூறினார். 
 

Next Story

மேலும் செய்திகள்