சர்கார் கதை உரிமை கோரியவருடன் சமரசம்

சர்கார் பட கதை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - காதாசிரியர் வருண் ராஜேந்திரன் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.
சர்கார் கதை உரிமை கோரியவருடன் சமரசம்
x
* சர்கார் பட கதை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - காதாசிரியர் வருண் ராஜேந்திரன் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. 

* விசாரணையை நேரில் பார்ப்பதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் நேரில் வந்திருந்தனர். 

* இந்த வழக்கில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் பட தயாரிப்பு நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

* சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் செங்கோல் கதாசிரியர் வருண் ராஜேந்திரனின் பெயர் போடவும் பட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது. 

Next Story

மேலும் செய்திகள்