3 தலைமுறை நடிகர்களுக்குப் பாட்டெழுதிய வாலிபக் கவிஞர் வாலி பிறந்த நாள்

வாலிபக் கவிஞர் வாலியின் லையுலக பயணம் பற்றிய தொகுப்பு
3 தலைமுறை நடிகர்களுக்குப் பாட்டெழுதிய வாலிபக் கவிஞர் வாலி பிறந்த நாள்
x
1931 ஆம் ஆண்டு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். 10ஆம் வகுப்புக்குப் பிறகு சென்னையிலுள்ள கவின்கலைக்கல்லூரியில், ஓவியப்பயிற்சி முடித்தார். பிரபல பாடகரான டி.எம்.செளந்தர்ராஜன் தான், வாலியை சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தார்.

ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் 15, ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. கண்ணதாசன் காலத்தில், அவருக்கு நிகராய் பாடல்கள் எழுதியவர். பாடல்வரிகள் வாலி எழுதியதா கண்ணதாசன் எழுதியதா என்று பல நேரம் ரசிகர்களை குழம்ப வைத்திருக்கிறது.


அந்நாட்களில் திரையுலகின் இருபெரும் நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் ஆஸ்தான கவிஞராக இருந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜிக்குப் பிறகு, காலத்திற்கேற்ப வந்த புதிய படங்களிலும் வாலியின் பாடல்களே ஆக்கிரமித்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, சிவகார்த்திகேயன் என, மூன்று தலைமுறை நடிகர்களுக்கு காலம் கடந்து, பாடல் எழுதினார். 

பொய்க்கால் குதிரை, சத்யா, பாத்தாலே பரவசம், ஹேராம் என சில படங்களில் நடித்திருக்கிறார் வாலி. திரைப்பாடல்கள் எழுதியது மட்டுமில்லாமல், கலியுகக் கண்ணன், ஒரு செடியின் இரு மலர்கள், சிட்டுக் குருவி உள்ளிட்ட 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் வாலி.

தமிழக அரசின், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை, ஐந்து முறை பெற்றிருக்கிறார். பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். பொய்க்கால் குதிரைகள், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என 15 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்