சேவை வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்...

சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் வரும் 26ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேவை வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்...
x
நடிகர் விஷால் 1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாததால், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சேவை வரித்துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு சம்மன் அனுப்பினர்.  ஆனால் .  விஷால் இதுவரை சேவை வரித்துறையினர் முன்பு ஆஜராகவில்லை... அவர் தரப்பில் இருந்து ஆடிட்டரும், வழக்கறிஞர் மட்டுமே ஆஜராகி பதில் அளித்து வந்தனர். சம்மன் கொடுத்தும் ஆஜராகாததால் சேவை வரித்துறை, நடிகர் விஷால் மீது இந்திய தண்டனை சட்டம் 174 பிரிவின் கீழ் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இன்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு நடிகர் விஷால் நேரில் ஆஜரானார். அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் வழக்கு தொடர்பாக விஷாலிடம் கேள்வி கேட்டு விசாரணை நடைபெறும் எனவும், ஆஜராகவில்லை என்றால்  வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் விஷாலுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
Next Story

மேலும் செய்திகள்