தேவர் மகன் 2 தயாராகி வருகிறது - தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமல் அறிவிப்பு

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தேவர் மகன் 2 தயாராகி வருகிறது  - தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமல் அறிவிப்பு
x
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான  கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் . இந்நிலையில் நேற்று சேலத்தில் மக்கள் முன்னிலையில் நடைபெற்ற கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் .அவரது அடுத்த படத்தை பற்றி கேட்ட போது 1992 ம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படத்தின் 2 ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார் .

கமல்ஹாசன் நடிப்பில்  1992ம் ஆண்டு  வெளியாகி தேசிய விருது வாங்கி தந்த படம் தேவர் மகன் . இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்க உளள்து என கமல் அறிவித்ததை அடுத்து ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர் .அதோடு அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய அளவில் இச்செய்தி டிரென்டிங்கில் இடம்பிடித்துள்ளது. அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
Next Story

மேலும் செய்திகள்