#MeToo புயல் : திரைத்துறைக்கு 500 கோடி நஷ்டம்
பதிவு : அக்டோபர் 12, 2018, 03:26 PM
தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பெண்கள் நேரடியாக சமூக வலைதளங்களில் பகிரும் #Metoo புயல் இந்தியா முழுவதும் வீசி வருகிறது.
தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பெண்கள் நேரடியாக சமூக வலைதளங்களில் பகிரும் #Metoo புயல் இந்தியா முழுவதும் வீசி வருகிறது. இந்த சுழலில் எஐபி ( AIB ) பந்தோம் (Phantom) போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் சிக்கியுள்ளன .இந்த இரு நிறுவனங்களும் hotstar, Amazon, Netflix உடன் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் உள்ளன. இவை அனைத்தும் இப்போது கேள்விக்குறியாகியுள்ளன.நகைச்சுவை நிகழ்ச்சி வழங்கும் AIB நிறுவனத்தின் ‘On Air with AIB’ சீசன் 3 என்ற நிகழ்ச்சி hotstar-ல் செப்டம்பர் 24 முதல் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் 7 பகுதிகளே ஒளிபரப்பான நிலையில் தற்போது பாலியல் புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. 70 சதவீத நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. மேலும் AIB யின்  'Chintu Ka Birthday' மற்றும் ரஜத் கபூரின்'Kadakh’ படங்கள், மும்பை திரைப்பட விழாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. குயின் திரைப்பட இயக்குனர் விகாஸ் பாலின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 'Super 30' திரைப்படம், நானா படேகரின் 75 கோடி மதிப்பிலான Housefull 4, சுபாஷ் கபூரின்  100 கோடி மதிப்பிலான ‘Mogul’ திரைப்படங்களும், அவர்களின் பெயர்கள் #Metoo-வில் வெளிவந்ததால் பாதிக்கப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் அவர்களின் திரைப்படங்களை காப்பாற்ற போராடி வருகின்றனர்.திரைப்பட வர்த்தக ஆய்வாளர் அதுல் மோகன் கூறுகையில், இந்த திரைப்படங்களும் நிகழ்ச்சிகளும் நின்றதன் காரணமாக, பொழுது போக்கு மற்றும் சினிமா துறையில் ரூ.500 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

#MeToo என்றால் என்ன?...

இணையவாசிகள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது Me too என்ற hash tag.

1003 views

பிற செய்திகள்

"வீடுகளை உடனடியாக காலி செய்ய வட்டாட்சியர் மிரட்டல்"

வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர் மிரட்டுவதாக வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.

5 views

பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரம் - ராயபுரம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

44 views

"சர்வதேச தொழில் நுட்பத்தில் சிலை இணைப்பு" - சிலையை ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல் தகவல்

நெல்லை மாவட்டம் பழவூர் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலையின் கை சர்வதேச தொழில் நுடபத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு பிரிவு ஐ.ஐி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

121 views

"ஸ்ருதியின் பின்னால் யாரோ இருக்கிறார்கள்" - நடிகர் அர்ஜூன்

ஸ்ருதியின் குற்றச்சாட்டு குறித்து நடிகர் அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார்.

11 views

15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா..!

சென்னையில் 15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா நடைபெற்றது.

36 views

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

445 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.