சர்வதேச ஆளில்லா விமானங்களை இயக்கும் போட்டியில் சாதித்த அஜித் அணி

நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் தக்சா அணி ஆளில்லா விமானங்களை இயக்கும் சர்வதேச போட்டியில் 2வது இடத்தைப் பெற்றுள்ளது.
சர்வதேச ஆளில்லா விமானங்களை இயக்கும் போட்டியில் சாதித்த அஜித் அணி
x
அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்.ஐ.டி.யில் பயிலும் ஏரோ-நாடிகல் மாணவர்கள், ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய, தக்சா என்ற குழுவை உருவாக்கினர். இந்த குழுவின் ஆலோசகராக  நடிகர் அஜித் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே ரிமோட் மூலம் வாகனங்களை இயக்குவதில் வல்லவரான அவரிடம், இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டதை அனைவரும் வரவேற்றனர். இந்நிலையில், தக்சா அணிக்கு சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற `Medical Express 2018 UAV Challenge' போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தக்‌ஷா அணி உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த 11 குழுக்கள் தேர்வாகின. அஜித் மேற்பார்வையில் தக்சா அணியினர் உருவாக்கிய ஆளில்லா விமானம் அதிக நேரம் வானில் பறந்து சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்