எப்படி இருக்கிறது சாமி 2..?
பதிவு : செப்டம்பர் 21, 2018, 09:20 PM
மாற்றம் : செப்டம்பர் 21, 2018, 09:36 PM
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான "சாமி" படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கிறது சாமி 2...

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான "சாமி" படத்தின் இரண்டாம் பாகமாக விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபிசிம்ஹா, சூரி, பிரபு, டெல்லி கணேஷ், உமா ரியாஸ்கான், சுதா சந்திரன், ஜான்விஜய், இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரமேஷ் கண்ணா, சிங்கமுத்து, கிரேன் மனோகர், டெல்லி கணேஷ், பாலாசிங், ஓஏ கே சுந்தர், உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இத்தப்படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.படத்தின் கதை...சாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சை - கோட்டா சீனிவாச ராவை, ஆறுச்சாமி - விக்ரம் எரித்து கொன்று விடுவார். ஆனால் ஊரைப் பொறுத்தவரை பெருமாள் பிச்சை தலைமறைவு, போலீஸ் வலைவீச்சு என்று படம் முடிந்து இருக்கும். அதன் தொடர்ச்சியாக ஆறுச்சாமியின் மகன் ராமசாமி - விக்ரம்., டெல்லியில் தனது தாத்தா - டெல்லி கணேஷ் , பாட்டி - சுமித்ரா இருவரது பாசகவனிப்பில் வளர்ந்து ஆளாகி, ஐபிஎஸ் ஆபிஸராகி ., திருநெல்வேலிக்கே சிறப்பு ஐபிஎஸ் அதிகாரியாக வருகிறார்.  பின்னர், பெருமாள் பிச்சை - கோட்டா சீனிவாச ராவின் . வாரிசுகள் பாபிசிம்ஹா, ஜான்விஜய், ஓ ஏ கே சுந்தர் மூவரும் தன் அப்பாவையும், அம்மாவையும் அநியாயமாக கொன்றதற்காக எப்படி அவர்களை பழிவாங்குகிறார்? என்பதை அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஹரி.

படத்தின் பலம்...தந்தை, மகன் என இரு வித கெட்-அப்களில் நடிகர விக்ரம் ஆறுசாமியாகவும், ராமசாமியாகவும் வேறுபாடுகளை சிறப்பாக காண்பித்துள்ளார். நான் ஆறுச்சாமி இல்ல-ராமசாமி என இட்லியில் பீர் ஊற்றாமல் மோர் ஊற்றி சாப்பிடும் காட்சி. கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் வாம்மா, போமான்னு மரியாதையா பேசணும் என புரோகிதராக அதிரடி பண்ணும் காட்சி . "உன் கையில பேனா இருக்கு ஆர்டர் போட....என் கையில் துப்பாக்கி இருக்கு ஆள தூக்குறதுக்கு... என்ற வசனங்கள் இடம் பெற்றுள்ள இந்த காட்சிகளில் தியேட்டரில் விசில்.மெயின் வில்லன் பாபி சிம்ஹா பார்வையிலேயே மிரட்டுகிறார். இளமையான மற்றும் வயதான கெட்-அப்களில் பாபி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  இந்த படத்தில் சண்டைக்காட்சிகளும் ஒளிப்பதிவும் அருமையாக உள்ளது. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்-ன் பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு ஏற்ப இருக்கிறது. ஆனால் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. படத்தின் பலவீனம்...சூரி காமெடி இந்த படத்தில் பெரிதாக எடுபடவில்லை. இடைவேளைக்குப் பிறகு இருக்கும் வேகம் படத்தின் ஆரம்பத்தில் கொஞ்சம் இல்லை. நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இது முழுக்க இயக்குனர் ஹரி ஃபார்முலா படம். அவர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு விருந்து.


தொடர்புடைய செய்திகள்

20 ஆம் தேதி வெளியாகிறது சாமி ஸ்கொயர்

நடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படம் வருகிற 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

820 views

ஜூலை 10ம் தேதி சாமி ஸ்கொயரின் முதல் சிங்கிள்

ஜூலை 10ம் தேதி, அதிரூபனே என்ற அந்த பாடல் வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.

249 views

பிற செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் - உறுப்பினர்களை நீக்கிய விவகாரம் : ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது நடிகர் சங்கம்

உறுப்பினர்கள் நீக்கியது தொடர்பான ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சங்கம் தாக்கல் செய்துள்ளது.

21 views

வெளிநாட்டைச் சார்ந்தவர் பாலியல் தொந்தரவு - நடிகை நிலானி புகார்

வெளிநாட்டை சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் மனு அளித்துள்ளார்.

22 views

சுவாமி சங்கரதாஸ் அணி கவர்னரை சந்தித்ததில் அர்த்தமில்லை - பூச்சி முருகன்

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த கவர்னரை சந்திக்கச் சென்றதாக பாண்டவர் அணியின் துணை தலைவருக்காக போட்டியிடும் பூச்சி முருகன் கூறினார்.

36 views

நடிகர் சங்க தேர்தல் ரத்தான விவகாரம் : அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுப்பு

நடிகர் சங்க தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

102 views

நடிகர் சங்கம் பிளவுக்கு யார் காரணம்? - ஐசரி கணேஷ் விளக்கம்

நடிகர் சங்கத்தின் பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோர் தான் காரணம் என ஐசரி கணேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

121 views

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் - நடிகர் உதயா

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் என நடிகர் உதயா குற்றம் சாட்டியுள்ளார்.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.