ரஜினி நடிப்பில் '2.0' படத்தின் டீசர் வெளியானது

இந்திய சினிமாவில் 3 டி-யில் டீசர் வெளியான முதல் படம் '2.0'
ரஜினி நடிப்பில் 2.0 படத்தின் டீசர் வெளியானது
x
இந்திய சினிமாவில் 3 டி-யில் டீசர் வெளியான முதல் படம். எதிர்பார்த்து காத்திருந்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி. வரும் நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது, '2.0'. இந்தியா முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் 3டி டீசர் வெளியீடு. ரஜினி நடிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவான '2.0' படத்தின் டீசர் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்கள்,  '2.0' பட டீசர் பார்த்து உற்சாகமடைந்துள்ளனர். 

2.0 3D டீசரை youtube-ல் பார்ப்பது எப்படி? :

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.ஓ படத்தின் டீசர் இன்று வெளியானது. ஒரே நேரத்தில் 2D மற்றும் 3D யில் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் டீசர் 3 டியில் வெளியாவது இதுவே முதல்முறை. 3டி டீசர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

எனினும் யூடியுப்பில் 3டி டீசரை காண்பது எப்படி என்ற கேள்வியை பலரும் முன்வைத்தனர். அதற்கு, அந்தப்படத்தின் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி பதில் அளித்துள்ளார்.  google cardboard அல்லது ஏதேனும் ஒரு Virtual Reality headset-யை பயன்படுத்தினால், யூடியூப்பிலும், டீசரை 3டியில் காண முடியும் என ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்