'காலா' படம் தொடர்பாக விநோத மனு..!

நீதிபதிகளுக்கு 'காலா' படத்தை பார்க்க ஏற்பாடு செய்யக் கோரி விநோதமான வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காலா படம் தொடர்பாக விநோத மனு..!
x
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தாம்பரம் அருகே புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த 24 குடும்பங்களை கடந்த 2010ம் ஆண்டு அப்புறப்படுத்திய குடிசை மாற்று வாரியம் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் நிலம் இல்லாதவர்கள் கஷ்டம்  குறித்து ரஜினி நடித்த 'காலா' படத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் அதை புரிந்து கொள்வதற்காக மாஜிஸ்திரேட் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவரும் அந்த படத்தை பார்க்க பிரதமர் அலுவலகமும் சட்ட அமைச்சகமும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்காக மாற்றுவதற்கான எண் இன்னும் வழங்கப்படவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்