வெளி வந்தது "பேட்ட" ரஜினியின் புதிய தோற்றம்

நடிகர் ரஜினிகாந்த் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் "பேட்ட" என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது.
வெளி வந்தது பேட்ட ரஜினியின் புதிய தோற்றம்
x
நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் "பேட்ட" என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக , வாரணாசி, சன்பத்ரா உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. சமீபத்தில் படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லூக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது லக்னோவில் நடைபெறும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரஜினிகாந்தின் தோற்றம் குறித்து சில புகைப்படங்கள் கசிந்துள்ளன. இந்த படங்கள், சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்