பாடகியான சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா...
கனா படத்திற்காக சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா " வாயாடி பெத்த புள்ள" என்ற பாடலை பாடி அசத்தி உள்ளார் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள படம் கனா. மகளிர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
அவரது இசையில், 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலை சிவகார்த்திகேயனின் மகள் ஆராதானா பாடியுள்ளார். எந்த வித தயக்கமும் இல்லாமல், மிகவும் அழகாக தந்தையுடன் சேர்ந்து அவர் பாடும் காட்சி காண்போரை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக பாடலை பாட தயாராகும் விதமும் நான்கரை வயதே ஆராதனா 'ஆஹான்' சொல்வதற்கும் பல பேர் ரசிகர்களாக மாறிவிட்டனர். அப்பாவிற்குக் செல்லபிள்ளையாக இருக்கும் எல்லா மகள்களுக்கும் இந்த பாடலை சமர்ப்பிப்பதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Next Story