ரஜினியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் த்ரிஷா
பதிவு : ஆகஸ்ட் 20, 2018, 05:40 PM
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு ஏற்கனவே சிம்ரன் ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில், தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜின்காந்தின் அடுத்த திரைப்படத்தில் அவருடன் நடிகை த்ரிஷா நடிப்பார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 


ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ், அனிருத் இருவருமே ரஜினியின் தீவிர ரசிகர்கள் என்பதால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.பல நாட்களாக நல்ல வில்லனை எதிர்பார்த்து காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு, விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக வந்த செய்தி, இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஜூலை மாதம், சிம்ரன் ரஜினியுடன் ஜோடி சேருகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. சிம்ரன் இதுவரை ஜோடி சேராமல் இருந்த ஒரே உச்ச நட்சத்திரம் ரஜினி தான். அந்த குறையும் தீர்ந்ததால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தி நடிகர் நவாசுதின் சித்திக்கும்  இந்த படத்தில் இணைந்துள்ளார்.

தற்போது நடிகை த்ரிஷா முதன்முறையாக ரஜினியுடன் இந்த படத்தில் ஜோடி சேருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை தன்னால் நம்பமுடியவில்லை என்றும்  கனவில் மிதப்பது போல உள்ளது என்றும் த்ரிஷா  தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் 


இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் ஜூன் மாதம் தொடங்கி, இதுவரை 2 கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. இன்னும் 50 சதவீதம் படப்பிடிப்புகள் மட்டுமே உள்ளன. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"ரஜினி, கமல் பின்னால் சென்றால் ஓட்டு கிடைக்காது" -சுப்பிரமணியன் சுவாமி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

340 views

'கோலமாவு கோகிலா' இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்...

'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

127 views

ரஜினி விரைவில் கோட்டையை பிடிப்பார் - தமிழருவி மணியன்

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வந்து தமிழக மக்களின் அன்பை பெற்று, கோட்டையை பிடிப்பார் என காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

2781 views

பிற செய்திகள்

ஹோட்டல் ஊழியர்களின் இசைத்திறமையை கண்டு வியந்த ஷங்கர் மஹாதேவன்

ஷங்கர் மஹாதேவனிடம் தங்களது பாடும் திறமையை வெளிப்படுத்திய ஹோட்டல் ஊழியர்கள்

151 views

உச்சத்தை தொட்ட சாமி2 பட வசூல்...

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள சாமி ஸ்கொயர் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

9286 views

வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் - 2019 ஆஸ்கார் போட்டிக்கு தேர்வான இந்திய படம்

வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற அசாம் திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்காரில் போட்டியிடும் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

106 views

ரகுமான் இசையில் தொடங்குகிறது உலக கோப்பை ஹாக்கி தொடர்..!

உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

16 views

'செக்க சிவந்த வானம்' : புதிய டிரைலர் வெளியானது

'செக்க சிவந்த வானம்' படத்தின் புதிய டிரைலர் இன்று காலை வெளியாகியுள்ளது.

1061 views

இணைய மோதலுக்கு பலியான பிரியா வாரியர் பாடல்

பிடித்துப் போனால் உலக அளவில் புகழின் உச்சிக்கே கொண்டு செல்லமுடியும் அதேசமயம் சீண்டிபார்த்தால், அதள பாதாளத்துக்கு தள்ளவும் முடியும் என தமிழ் இளைஞர்கள் இணையதளங்களில் மார்தட்டி வருகின்றனர்.

3872 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.