கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தென்னிந்திய திரையுலகினர் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.
கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி
x
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நடிகர் விக்ரம் 35 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அதற்கான காசோலையை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி ரூ15 லட்சம் நிதி உதவி



கேரளாவில் வீடு, உடை, உணவு என அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு தரப்பினரும், தங்களால் இயன்ற அளவில் நிதியுதவி செய்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு ரூ25 லட்சம் நிதியுதவி 



பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, கேரள வெள்ள நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். 

ஷங்கர், உதயநிதி ரூ10 லட்சம் நிவாரண நிதியுதவி 


கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு  நடிகர் உதயநிதி ஸ்டாலின் பத்து லட்சம் ரூபாய் நிதி உதவியை ஆன்லைன் மூலம் வழங்கியுள்ளார்.



இதேபோல், இயக்குனர் ஷங்கர் பத்து லட்ச ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்