நடிகர் வடிவேலுவுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு : நில தகராறு தொடர்பான பிரச்னையில் சமரசம்
பதிவு : ஜூலை 27, 2018, 08:14 AM
மாற்றம் : ஜூலை 27, 2018, 08:19 AM
நில விற்பனை தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தாக கூறி நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் மீது பழனியப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு பதிலடியாக, மோசடி செய்ததாகக் கூறி பழனியப்பன் உள்பட இருவருக்கு  எதிராக 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த அனைத்து வழக்குகளும்  நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது நில பிரச்னை தொடர்பாக நடிகர் வடிவேலு மற்றும் பழனியப்பன்  இடையே சமரசம் ஏற்பட்டு, பழனியப்பன் தரப்பில் வடிவேல் தரப்பினருக்கு 85 லட்சம் ரூபாய்க்கான   வரைவோலை அளிக்கபட்டது.இதனையடுத்து பழனியப்பனிடம் நஷ்ட ஈடு கோரிய மனுவை நடிகர் வடிவேலு திரும்ப பெற்றுக் கொண்டார். இதையடுத்து அனைத்து வழக்குகளையும் நீதிபதி முடித்து வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

60 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

1732 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

304 views

ரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்

தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

647 views

பிற செய்திகள்

ப்ரித்திகா மேனனின் புகாரில் உண்மையில்லை - நடிகர் தியாகராஜன்

ப்ரீத்திகா மேனன் தற்போது தனது பதிவை நீக்கியுள்ளதன் மூலம் அவரின் புகார் பொய் என்பது தெரிவதாக நடிகர் தியாகராஜன் கூறியுள்ளார்.

22 views

சீனு ராமசாமியுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி

4 வது முறையாக சீனு ராமசாமி இயக்கும் படம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்

110 views

ரஜினியின் சமூக அக்கறை உற்சாகத்தை தருகிறது - ரஞ்சித்

பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டியதற்காக ரஜினிகாந்திற்கு நீலம் புரொடெக்சன்ஸ் சார்பாக இயக்குனர் பா.ரஞ்சித் நன்றி தெரிவித்துள்ளார்.

216 views

போலாந்தில் 4 இடங்களில் வெளியாகும் சர்கார்

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார்.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி 2 கோடி பார்வையாளர்களை தாண்டி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது

1083 views

லிங்குசாமி இயக்கத்தில் ஜெயல‌லிதாவின் வாழ்க்கை வரலாறு - திவாகரன் மகன் ஜெயானந்த்

லிங்குசாமி இயக்கத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயல‌லிதாவின் வாழ்க்கை வர‌லாறு திரைப்படம் உருவாக உள்ளதாக திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

1675 views

"வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும்" - இயக்குனர் வெற்றிமாறன் உறுதி

'வடசென்னை' படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

469 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.