ஊழல் முறைகேடு புகார் - விசு கண்டனம்...

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் அறக்கட்டளையை ஒப்படைக்க தயார் என இயக்குனர் விசு தெரிவித்துள்ளார்.
ஊழல் முறைகேடு புகார் - விசு கண்டனம்...
x
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க அறக்கட்டளையில், ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, இயக்குனர் பாக்யராஜ் கடந்த திங்கட்கிழமையன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பாக்கியராஜின் இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ள இயக்குனர் விசு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் அறக்கட்டளையை ஒப்படைக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், இதனை தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்