இன்று - கவிஞர் வைரமுத்து பிறந்த நாள்
பதிவு : ஜூலை 13, 2018, 07:18 PM
கவிஞர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளாக இன்று அவரைப் பற்றிய ஒரு தொகுப்பு...
தமிழ் திரையுலகில் தனது வைர வரிகளால் பாடல்களை ஜொலிக்க செய்தவர்... தமிழுக்கு தன் படைப்புகளால் புது ரத்தம் பாய்ச்சியவர்... எழுத்தில் இளமை மின்னும்... பேச்சில் தமிழ் மணக்கும்... அவர்தான் கவிப்பேரரசு வைரமுத்து.

ஒரு பொன்மாலைப் பொழுதில் திரையுலகில் மெல்லிய தென்றலாய் நுழைந்த வைரமுத்து, தன் பாடல்களால் இசையையும், மொழியையும் வசியப்படுத்தியவர்.

கிராமத்து புழுதி மண்ணில் தவழ்ந்து விளையாடிய வைரமுத்து 12 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். வடுகப்பட்டியில் பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முடித்தார். மரபு ரீதியான கவிதைகளில் தொடங்கி புதுக்கவிதையில் புகுந்து, திரைப்பாடல்களில் வார்த்தை ஜாலம் நிகழ்த்தினார். 19 வயதிலேயே பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை படித்தபோது வைகறை மேகங்கள் என்ற தலைப்பில் தனது முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.

தனது 28 ஆம் வயதிலேயே இதுவரை 'நான்' என்ற சுயசரிதை எழுதிய வைரமுத்துவின் பல நூல்கள் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக உள்ளது. 1980 ல் வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக திரையுலக பயணத்தை தொடங்கிய, கவிஞர் வைரமுத்து, அடுத்த ஆண்டே, சிறந்த பாடலாசிரியருக்கான, தமிழக அரசின் விருது பெற்றார்.

1986 ஆம் ஆண்டு முதல் மரியாதை படத்தின் பாடலுக்காக தேசிய விருது என்ற உச்சத்தை தொட்டார்.

தொடர்ந்து, 2 ஆவது முறையாக1993 ஆம் ஆண்டு ரோஜா படத்திற்காக எழுதிய, சின்னச்சின்ன ஆசை பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றார்.

தொடர்ச்சியாக தனது திரையுலக பயணத்தில் கருத்தம்மா, (போறாளே பொன்னுத்தாயி )சங்கமம், (முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்) கன்னத்தில் முத்தமிட்டால் (விடை கொடு எங்கள் நாடே) தென்மேற்குப் பருவக்காற்று, ஆகிய படங்களில் எழுதிய பாடல்கள் வைரமுத்துவின் மகுடத்தில் வரிசையாக பல சியாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தர்மதுரை படத்தில் இடம்பெற்ற எந்தப் பக்கம் காணும்போதும் வானம் ஒன்று.. என்ற பாடலுக்காக 7வது முறையாக தேசிய விருது பெற்றார், வைரமுத்து.

அலைபாயுதே படத்தில் வைரமுத்து எழுதிய, சிநேகிதனே பாடல் காதலின் நுணுக்கமான விஷயங்களைப் பந்தி வைத்தது.

இளையராஜா இசையில், வைரமுத்துவின் பாடல்கள் எல்லாமே ஒருவகையில், தனித்துவமானதுதான் என்றாலும், தனக்கு மிகவும் பிடித்ததாய் அவர் சொல்வது எது தெரியுமா..?

2003 ஆம் ஆண்டு வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு இலக்கியத்துறையின் மிக உயரிய சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இதுபோல், ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் வைரமுத்துவின் கருவாச்சி காவியம் தமிழ் இலக்கிய உலகின் ஆகச்சிறந்த படைப்பாக பார்க்கப்படுகிறது. கலைமாமணி, பத்ம விருதுகளும் வைரமுத்துவை அங்கீகரித்திருக்கின்றன.

38 ஆண்டுகால திரைப்பயணத்தில், '7 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள், 30 க்கும் அதிகமான புத்தகங்கள் என்று தனது படைப்புகளால் தமிழுலகையும், திரையுலகையும் நிறைத்திருக்கிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிதான், வைரமுத்துவுக்கு, கவிப்பேரரசு என்று பட்டம் சூட்டி பெருமைப்படுத்தினார். அந்தளவிற்கு, அவருடன், மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டியவர்.

காலத்தால் நரைக்காத தனது படைப்புகளால், தமிழை என்றும் இளமையாக, இன்று பூத்த மலர்போல புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது, இவரது எழுத்து. அவர்தான் கவிப்பேரரசு வைரமுத்து.

தொடர்புடைய செய்திகள்

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் : காவல் நிலையத்தில் அர்ஜூன் ஆஜர்

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில், நடிகர் அர்ஜூன் ஆஜரானார்.

705 views

நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை : கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை சுருதி ஹரிகரன் அளித்துள்ள பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூனை கைது செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

264 views

ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் அர்ஜூன்

பாலியல் புகார் சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக 5 கோடி ரூபாய் கேட்டு, நடிகர் அர்ஜூன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

1178 views

#MeToo பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு - சட்டம் சொல்வது என்ன?

பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் எப்படி புகார் அளிப்பது? பல வருடங்களுக்கு பின் சொன்னால் செல்லுமா?

143 views

பிற செய்திகள்

சர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்" - இயக்குநர் கவுதமன்

சர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.

63 views

ரூ.200 கோடி வசூலை ஈட்டிய சர்கார் - சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல்

விஜய் நடித்த சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

1336 views

'சர்கார்' காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ : அரசை விமர்சித்த இளைஞர்கள் மீது போலீஸ் நடவடிக்கை

விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்ட இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

633 views

நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா

நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா

14 views

96 படத்தின் கதை என்னுடையது தான் - சுரேஷ், உதவி இயக்குநர்

96 படத்தின் கதை என்னுடையது தான் - சுரேஷ், உதவி இயக்குநர்

10 views

சர்கார் திரைப்படத்திற்கு மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு

சர்கார் திரைப் படத்திற்கு மலேசியாவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

10906 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.