நடிகைகளை தவறான தொழிலுக்கு அழைப்பதா..? - ஜெயலட்சுமி கண்ணீர் பேட்டி

டிவி நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வாட்ஸ்-அப் மூலம் வலை விரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகைகளை தவறான தொழிலுக்கு அழைப்பதா..? -  ஜெயலட்சுமி கண்ணீர் பேட்டி
x
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெயலட்சுமி 
என்பவர் திரைப்படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருக்கு வாட்ஸ் அப் மூலம் ரிலேஷன்ஷிப் டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் பாலியல் தொழில் குறித்த மெசேஜ், இரண்டு முறை வந்துள்ளது.

அதில், பாலியல் தொழில் மூலம் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் 
முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும், விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஜெயலட்சுமி, பின்னர் போலீசாரிடம் புகார் அளித்தார். 

 
₨30 ஆயிரம் முதல் ₨3 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று இருந்தது
2-வது முறை, வேறு எண்ணில் இருந்து மெசேஜ் வந்தது"
"நடிகையா இருப்பது ஒரு தவறா?"

நடிகைகள் சிலரின் பேஸ்புக் கணக்கில் இருந்து நடிகைகளில் புகைப்படங்களை எடுக்கும் அந்தக் கும்பல், நடிகைகளுக்கு தெரியாமலே அவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து, தங்களிடம் இத்தனை  நடிகைகள் இருப்பதாக, விலை பேசுகின்றனர். அதுபோல, 56 நடிகைகளின் புகைப்படங்களுடன் உலா வந்த அந்த வாட்ஸ் அப் மெசேஜ்களை திரட்டிய  ஜெயலட்சுமி அதை காவல்துறையிடம் வழங்கினார். நடிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் போதாதால், எல் ஐ சி முகவராக பணிபுரிந்து வரும் தான், தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக  ஜெயலட்சுமி சொல்கிறார்.
வருமானம் போதவில்லை என்பதால், எல்.ஐ.சி முகவராக இருக்கிறேன்"

ஜெயலட்சுமி திரட்டி தந்த தகவல்களின் அடிப்படையில்,  வாட்ஸ்-அப் மூலம் நடிகைகளுக்கு வலை விரித்த கும்பலைச் சேர்ந்த கவியரசன், முருகப்பெருமாள் என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்